மேலும் செய்திகள்
விபத்தை ஏற்படுத்தும் பேனர்கள்
02-Sep-2025
தேனி: தேனி நகர்பகுதியில் பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே நீட்டி உள்ளன. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் காயமடைகின்றனர். தேனி நகர்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ள பகுதிகளில் புதிதாக ரோடு பணிகள் அவ்வப்போது நடக்கின்றன. ஆனால், ரோட்டின் உயரத்திற்கு ஏற்ப பாதாள சாக்கடை மூடிகளை சீரமைத்து வைப்பதில் நகராட்சி கவனம் செலுத்துவதில்லை. இதனால் பல இடங்களில் ரோட்டை விட உயரம் அதிகமாகவும், சில இடங்களில் பள்ளமாகவும் உள்ளன. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் பாதாள சாக்கடை மூடிகளில் மோதி கீழே விழுந்து காயமடைகின்றனர். சில இடங்களில் ரோட்டை விட உயரமாக உள்ள மூடிகளில் உள்ள இரும்பு பட்டைகள் சேதமடைந்து கூர்மையான ஆயுதங்களாக காட்சியளிக்கின்றன. இவை வாகனங்களின் டயர்களை சேதப்படுத்துகின்றன. இதனை தவிர்க்க ரோட்டின் உயரத்திற்கு ஏற்ப பாதாள சாக்கடை மூடிகளை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
02-Sep-2025