உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரக்காமலை முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

மரக்காமலை முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

போடி: போடி அணைக்கரைப்பட்டி அருகே பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான மரக்காமலை முனீஸ்வரர், லாட சன்னாசியப்பன் கோயில் உள்ளது. இங்கு வேண்டியவர்களுக்கு வேண்டிய வரம் கிடைப்பதாக ஐதீகம். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2 நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கும்பாபிஷேக யாக குண்டல ஹோமம் நடந்தது.நேற்று கோயில் கும்பாபிஷேகம் ஊர் பொதுமக்கள், திருப்பணி கமிட்டி தலைமையில் நடந்தது. மரக்காமலை முனீஸ்வரர், லாட சன்னாசியப்பன், கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு ஆசி பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடப்பதால் இக்கோயிலில் பக்தர்கள் கிடாவெட்டு, கோழி பலியிடுதல் கூடாது என கோயில் திருப்பணி கமிட்டி தெரிவித்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ