உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாரத்தான் போட்டி

மாரத்தான் போட்டி

தேனி : தேனி மாவட்ட நிர்வாகம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணா்துரை பிறந்த நாள் விழா மாரத்தான் போட்டி நடந்தது. போட்டி அரண்மனைப்புதுார் விலக்கு முதல் கொடுவிலார்பட்டி வரை நடந்தது. மாணவர்கள், மாணவிகள் பங்கேற்றனர். போட்டியை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவங்கி வைத்தார். முதல் 10 இடங்களை வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட் டன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பிரிவில் தனித்தனியே போட்டிகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் வருகை குறைவாக இருந்ததால் ஒரே பிரிவாக நடத்தப்பட்டது. விளையாட்டு அலுவலர் சிவக்குமார் போட்டியை ஒருங்கிணைத்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை