உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  திருநெல்வேலி பயிற்சிக்கு செல்ல கணித பாட ஆசிரியர்கள் எதிர்ப்பு 10ம் வகுப்பு தேர்ச்சி பாதிக்கும் என குமுறல்

 திருநெல்வேலி பயிற்சிக்கு செல்ல கணித பாட ஆசிரியர்கள் எதிர்ப்பு 10ம் வகுப்பு தேர்ச்சி பாதிக்கும் என குமுறல்

தேனி: ''திருநெல்வேலியில் டிச.1 முதல் டிச.5 வரை நடக்கும் பயிற்சியில் பங்கேற்க கணித ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றால் அரையாண்டுத் தேர்வில் 10ம் வகுப்பு கணித தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும்,'' என, குமுறுகின்றனர். திருநெல்வேலியில் டிச.1 முதல் டிச.5 வரை தனியார் ஓட்டலில் ஆசிரியர்களுக்கு கணித பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில் தேனி மாவட்டத்தில் இருந்து அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 55 கணித ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் பற்றி வகுப்பு எடுக்க பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கூறுகின்றனர். இந்த பயிற்சி வகுப்பை ஜூன் முதல் ஆகஸ்டுக்குள் நடத்தி இருக்க வேண்டும். டிச.10ல் அரையாண்டு தேர்வுகள் துவங்க உள்ளன. ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்றால் மீண்டும் டிச.7 ல் தான் வகுப்பிற்கு செல்ல முடியும். அன்று தமிழ் தேர்விற்கு மாணவர்கள் தயாராக துவங்குவர். இதனால் ஒரு வாரத்திற்கு மேல் கணித பாடம் படிக்காமல் நேரடியாக தேர்வு முதல் நாள் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பை வேறு நாளில் மாற்றி அமைக்க வேண்டும். அல்லது அடுத்த கல்வியாண்டு துவக்கத்தில் நடத்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி