உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இந்திய அணி அமர்வு கிரிக்கெட் போட்டிக்கு மேல்மங்கலம் ஆட்டோ டிரைவர் தேர்வு

இந்திய அணி அமர்வு கிரிக்கெட் போட்டிக்கு மேல்மங்கலம் ஆட்டோ டிரைவர் தேர்வு

தேவதானப்பட்டி: இந்திய அமர்வு (மாற்றுத்திறனாளி உட்கார்ந்து விளையாடுதல்) கிரிக்கெட் அணிக்கு 'ஆல் ரவுண்டராக' மேல்மங்கலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகேந்திரன் தேர்வாகியுள்ளார்.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் நாகேந்திரன் 33, (மாற்றுத்திறனாளி). இவர் 12 வயது முதல் கிரிக்கெட் விளையாட துவங்கினார். ஆசிரியர் பயிற்சி முடித்த நிலையில் வேலை கிடைக்காததால் சகோதரிகள் உதவியுடன் ஆட்டோ வாங்கி ஓட்டுகிறார். மதுரை விளையாட்டு அணியில் சேர்ந்து பத்தாண்டுகளுக்கு முன் அறிமுகமான இவர், அமர்ந்து விளையாடும் கிரிக்கெட் அணியில், பேட்டிங், பவுலிங் என ஆல் ரவுண்டராக விளையாடி வந்தார்.தமிழ்நாடு அணிக்கு தேர்வானார். இந்திய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்தார். இந்திய அமர்வு அணிக்கு 'ஆல்ரவுண்டர்' விளையாடுவதற்கு அக்.29ல் தேர்வாகி உள்ளார்.நாகேந்திரன் கூறியதாவது: பயிற்சியும், முயற்சியும் இருந்தால் வெற்றியை நமதாக்கலாம். இந்திய அணியில் தேர்வாகி உள்ளேன். அடுத்தாண்டு ஜனவரியில் இலங்கையில் போட்டி நடக்கிறது. நுட்பமாக விளையாடி அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன் என்றார். இவரை வாழ்த்த 90431 98975.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி