மேலும் செய்திகள்
சின்னமனுாரில் வேன் திருட்டு
22-Aug-2025
உத்தமபாளையம் : உத்தமபாளையம் அருகே அம்மாபட்டி கிழக்கு தெருவில் வசித்த பாண்டியன் மகன் ராஜ்குமார் 35, மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு திருமணமாகவில்லை. வீட்டில் தனியாக இருந்துள்ளார். மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் வைத்திருந்த மாத்திரைகளை மொத்தமாக விழுங்கியுள்ளார். மயக்கமடைந்த இவரை அருகில் இருந்த இவரது தங்கை பிரசனா தேவி, உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். பின் தீவிர சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அக்கா ஜெயபிரபா புகாரின்பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
22-Aug-2025