உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தேனி: தேனி முத்துத்தேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ராணுவ தேர்விற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் முன்னாள் மாணவி கேப்டன் அன்னபூரணி மாணவர்களுடன் கலந்துரையாடி ராணுவ வீரர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைத் தலைவர் ராஜமோன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் பாலசரவணக்குமார், இணைச்செயலாளர்கள் வன்னியராஜன், அருண்குமார், பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை