உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பெரியகுளம், : பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி விழா வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, வீராச்சாமி தலைமை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராம்சங்கர் வரவேற்றார். பள்ளி அறிவியல் கண் காட்சியில் சந்திராயன் விக்ரம் லேண்டர், வானம் நீலநிறம், ஹெரான் பம்ப், பைசா நகர சாய்ந்த கோபுரம், டயாலிசிஸ் கருவி, வைகை அணையில் தண்ணீர் செல்வது உட்பட 200 க்கும் அதிகமான படைப்புகளை மாணவ, மாணவிகள் காட்சிபடுத்தி விளக்கினர். வட்டார வளமை மேற்பார்வையாளர் ரோஸி, ஆசிரியர் பயிற்றுனர் தெய்வேந்திரன், பள்ளி குழு உறுப்பினர் கணேஷ் பார்வையிட்டு அறிவியல் தினம் குறித்து பேசினர். ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ