உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மீது டிராக்டர் மோதி மில் தொழிலாளி பலி

டூவீலர் மீது டிராக்டர் மோதி மில் தொழிலாளி பலி

தேனி : உப்புக்கோட்டை இந்திரா காலனி வடக்குத் தெரு சகாதேவன் 27. வேடசந்துார் மில் தொழிலாளி. தனது குடும்பத்துடன் கரூர் மாவட்டம் மாயனுாரில் வசிக்கிறார். பிப்., 9ல் உப்புக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்தார். பின் நேற்று காலை மாயனுார் செல்வதாக கூறி டூவீலரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது உப்புக்கோட்டையில் இருந்து அன்னஞ்சி பைபாஸ் வீரப்ப அய்யனார் கோயில் பிரிவு அருகே வந்தார். அப்போது எதிரே லட்சுமிபுரம் நேருஜி ரோட்டை சேர்ந்த டிரைவர் திருப்பதி ஓட்டி வந்த டிராக்டர், டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்தில் சகாதேவன் இறந்தார். அல்லிநகரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ