உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மினி பவர் ஹவுஸ் தடுப்பணை சீரமைப்பு பணிகள் துவங்கியது: சின்ன வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை

மினி பவர் ஹவுஸ் தடுப்பணை சீரமைப்பு பணிகள் துவங்கியது: சின்ன வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை

கூடலுார்: குள்ளப்பகவுண்டன்பட்டி மினி பவர்ஹவுஸ் தடுப்பணை வெள்ளத்தில் சேதமடைந்ததை சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கூடலுார் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி முல்லைப் பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தலா 1.25 மெகாவாட் வீதம் 2 ஜென ரேட்டர்களில் 2.50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அக். 17ல் பெய்த கன மழையால் தடுப்பணையின் ஒரு பகுதி உடைப்பு ஏற்பட்டு மின் நிலையத்திற்குள் மண்ணுடன் கலந்த காட்டாற்று வெள்ள நீர் புகுந்து கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. தடுப்பணையில் தேக்கப்பட்ட தண்ணீர், ஒட்டியுள்ள கம்பம் சின்ன வாய்க்கால் மூலம் திறக்கப்பட்டு 1400 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் பயனடைந்து வருகிறது. இந்நிலையில் தடுப்பணை உடைந்ததால் சின்ன வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லவில்லை. தற்போது நெல் அறுவடை முடிவடைந்து இரண்டாம் போகத்திற்கான நாற்றங்கால் அமைக்கும் பணி துவக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதனால் விரைந்து தடுப்பணையை சீரமைத்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தடுப்பணை சீரமைக்கும் பணியை விரைவில் துவக்குவதற்காக பெரியாறு வைகை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், எம்.பி., தங்கதமிழ்செல்வன் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது சீரமைப்பு பணிக்காக மணல் மூடைகள் அடுக்கப்பட்டு பணிகளை துவக்கி உள்ளனர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர், உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன், உதவி பொறியாளர் பிரேம் ராஜ்குமார் ஆகியோர் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை