பைக் மீது மினி லாரி மோதி தம்பதி பலி
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், உசிலம்பட்டி கீழப்புதுார் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ்குமார், 28. இவரது மனைவி மரியாள், 24. நவ., 7ல் ராஜ்குமார் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டியில் இருந்து மணியக்காரன்பட்டிக்கு சென்றார். திம்மரசநாயக்கனுார் முருகன் கோவில் அருகே எதிரே வந்த மினி லாரி மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்குமார் அன்றிரவு இறந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மரியாள் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் மினி லாரி டிரைவர் ஷஜீவ், 48, மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.