மேலும் செய்திகள்
ஆற்றில்குளிக்க சென்ற மாணவர் மாயம்
01-Dec-2025
தேனி: தேனியில் கடந்த நவ.30ல் முல்லைப் பெரியாற்று வெள்ளத்தில் காணாமல் போன சிறுவன் அர்ஜூன் 14, என்பவரை 25 நாட்களுக்கு பின் நேற்று பேரிடர் மீட்பு படையினர் தேடுதலில் ஈடுபட்டனர். தேனி சுப்பன் தெரு அழகர்சாமி மகன் அர்ஜூன். இவர் முல்லைப் பெரியாற்றில் நவ. 30ல் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி காணாமல் போனார். போலீசார், தீயணைப்புத்துறையினர் தேடியும் கிடைக்கவில்லை. பெற்றோர் கோரிக்கையை ஏற்று, எஸ்.பி., சினேஹா பிரியா, கலெக்டர் ரஞ்ஜித் சிங் பரிந்துரையில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேற்று சுப்பன்தெரு முல்லை பெரியாற்று பகுதியில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். தேனி இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி, ஜவஹர்முன்னிலையில், துணைத் தளபதி டாக்டர் கோவிந்த், படையின் குழு கட்டளை ஆணையர் அர்ஜூன்பால் தலைமையிலான 30 படை வீரர்கள் ஈடுபட்டனர். தேடுவதற்கு உதவிடும் வகையில் 400 கன அடி நீர் பெரியாறு அணையில் குறைக்கப்பட்டது.
01-Dec-2025