உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முட்செடிகளால் வாகன ஓட்டிகள் சிரமம்

முட்செடிகளால் வாகன ஓட்டிகள் சிரமம்

போடி: போடி அருகே மீனா விலக்கில் இருந்து பொட்டல் களம் வழியாக பத்திரகாளிபுரம் செல்லும் ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.போடி அருகே தீர்த்தத்தொட்டி தேனி மெயின் ரோட்டில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் பண்ணைத் தோப்பு, பத்திரகாளிபுரம் அமைந்து உள்ளது. போடி மீனா விலக்கில் இருந்து பொட்டல் களம் வழியாக பத்திரகாளிபுரம் பண்ணைத்தோப்பு செல்ல 3 கி.மீ., துாரம் ஆகும். இதனால் ஒரு கி.மீ., துாரம் சுற்றிச் செல்வது தவிர்க்கப்படுகிறது.ஆனால் இந்த ரோட்டின் இருபுறமும் மூட்செடிகள் வளர்ந்து உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் உள்ளது.இதனால் விவசாயிகள் விளைப் பொருட்களை கொண்டு வரவும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். வேகமாக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே ரோட்டின் இருபுறமும் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை