எம்.பி., தங்கதமிழ்செல்வன் பிறந்த நாள் விழா
தேனி: தேனி எம்.பி.,யும், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளருமான தங்கதமிழ்செல்வனின் 63வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் வாழ்த்து அனுப்பினர்.எம்.பி.,யின் சொந்த ஊரான நாராயணத்தேவன்பட்டியில் தனது தாய், தந்தை, கட்சி தலைவர் படங்களுக்கு மலர் துாவி மரியாதை செய்தார். கம்பத்தில் உள்ள எம்.பி.,யின் வீட்டில் கட்சியினர் முன்னிலையில் 63 கிலோ எடையிலான கேக்யை எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் வெட்டினார். கட்சியினர் அவருக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் தேனி நகர நகரச் செயலாளர் நாராயணபாண்டியன், போடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் அய்யப்பன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், தேனி நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, துணைத் தலைவர் செல்வம், மாவட்ட அவைத் தலைவர் செல்லப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பன், லட்சுமணன், ரத்தினசபாபதி, பெரியபாண்டி, முருகேசன், நகரச் செயலாளர்கள் புருஷோத்தமன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பால்பாண்டி, விளையாட்டு அணி அமைப்பாளர் ராஜேசேகர், நிர்வாகிகள் ராஜா ரமேஷ், செந்தில் ஜக்கப்பன், சசி, தமிழன், முன்னாள் தேனி நகர அமைப்பாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி நல்லதம்பி, வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் கீதா, மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் பாண்டியராஜன், அரசு ஒப்பந்ததாரர்கள் முத்துகோவிந்தன், பாண்டியராஜன், வசந்த், அனைத்து செட்டியார் பேரவைத் தலைவர் ஜெகநாத்மிஸ்ரா, அயலக அணி அமைப்பாளர் ராஜன், கவுன்சிலர் சதீஸ், இளைஞரணி துணை அமைப்பாளர் பரணீஸ்வரன், விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், துணை அமைப்பாளர் திருநாவுக்கரசு உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். வழக்கறிஞர் நிஷாந்த் நன்றி தெரிவித்தார்.