| ADDED : பிப் 24, 2024 04:01 AM
மூணாறு : மூணாறு ஊராட்சியில் இரண்டு வார்டுகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று வார்டுகளை தக்க வைத்துக் கொண்டது.மூணாறு ஊராட்சியில் 21 வார்டுகளில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 11, இடது சாரி கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி பெற்று ஊராட்சியை காங்., கைப்பற்றியது. காங்., சேர்ந்த 11ம் வார்டு உறுப்பினர் ராஜேந்திரன், 18ம் வார்டு உறுப்பினர் பிரவீணா ஆகியோர் 2022 ஜனவரியில் இடதுசாரி கூட்டணியில் இணைந்ததால் காங்கிரஸ் நிர்வாகம் கவிழ்ந்தது. அவர்கள் இருவரையும் கட்சி தாவல் தடுப்பு சட்டத்தில் உறுப்பினர் பொறுப்பில் இருந்து மாநில தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்தது.அதனால் அந்த இரண்டு வார்டுகளிலும் இடைத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று ஓட்டுகள் எண்ணப்பப்பட்டன. அதில் இரண்டு வார்டுகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று வார்டுகளை தக்க வைத்துக் கொண்டது. அதன் விபரம் வருமாறு: 11ம் வார்டில் மொத்த ஓட்டுகள் 804, பதிவானவை 496,நடராஜன் (காங்) - 262, ராஜ்குமார் (இடது சாரி கூட்டணி) -227,சுபாஷ் (பா.ஜ) -7,வித்தியாசம் - 35.18ம் வார்டில் மொத்த ஓட்டு 1280,பதிவானவை 1003,லெட்சுமி (காங்) -531, நவநீதம் (இடது சாரி கூட்டணி) -472வித்தியாசம் - 59.தற்போது காங்., வசம் உள்ள ஊராட்சியில் காங்., 13, இடது சாரி கூட்டணி 8 என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ளனர்.