மேலும் செய்திகள்
ரூ.40 லட்சம் மோசடிமுக்கிய குற்றவாளி கைது
13-Aug-2025
போடி:கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட தகராறில், 45 வயது நபரை கத்தியால் குத்திக்கொலை செய்த பாலமுருகன், 33, என்பவரை, போடி நகர் போலீசார் கைது செய்தனர். போடி கருப்பசாமி கோவில் தெரு ஆண்டிவேல் 45. இவரது மனைவி இறந்துவிட்டார். ஆண்டிவேலுக்கும், கரட்டுப்பட்டியில் வசிக்கும் பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில், போக்சோ வழக்கில் ஆண்டிவேல் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைக்கு சென்ற நிலையில் அந்த பெண்ணிற்கும், போடி குலாலர் பாளையம் சுல்லக்கரை தெரு பாலமுருகன், 33, என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன் தண்டனை முடிந்து வந்த ஆண்டிவேல், தன் காதலியுடன் பாலமுருகன் தொடர்பில் இருப்பதை அறிந்தார். இது குறித்து பாலமுருகனின் தந்தை நடராஜனிடம் தகராறு செய்து, கம்பியால் தாக்கினார். ஆத்திரம் அடைந்த பாலமுருகன் கத்தியால், ஆண்டிவேலை குத்திக் கொலை செய்தார். வி.ஏ.ஓ., ஆனந்தகுமார் புகாரில், போடி டவுன் போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.
13-Aug-2025