உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நபார்டு அலுவலகம் திறப்பு

நபார்டு அலுவலகம் திறப்பு

தேனி: தேனி மாவட்டத்திற்கான நபார்டு வங்கி மதுரை மண்டலத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு பின் தற்போது தேனியில் நபார்டு அலுவலகம் துவக்கப்பட்டுள்ளது. தேனி ஸ்ரீராம்நகரில் தேசிய வேளாண், ஊரக வளர்ச்சி வங்கி மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடந்தது. நபார்டு தமிழகம், புதுச்சேரி தலைமை பொது மேலாளர் ஆனந்த், பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், நபார்டு மாவட்ட அலுவலர் ராபின்சன் ராஜா, தோட்டக்கலைக் கல்லுாரி முதல்வர் ராஜாங்கம், கால்நடை மருத்துவ கல்லுாரி முதல்வர் பொன்னுதுரை, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் மோகன்ராஜ், முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் ரவிக்குமார், பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி வணிக மேம்பாட்டு மைய நிர்வாகி வசந்தன் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை