உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கவுமாரியம்மன் கோயில் திருப்பணியில் நாராயணத்தேவன்பட்டி கிராம கமிட்டி தீவிரம்

கவுமாரியம்மன் கோயில் திருப்பணியில் நாராயணத்தேவன்பட்டி கிராம கமிட்டி தீவிரம்

கம்பம்: கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கவுமாரியம்மன் கோயில் திருப்பணிகளை, எம்.பி. தங்க தமிழ்செல்வன் தலைமையில் அனைத்து சமுதாய நிர்வாகிகளை கொண்ட கிராம கமிட்டியினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். நாராயணத்தேவன்பட்டியில் கவுமாரியம்மன் கோயில் சுருளிஅருவி செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது. நான்கைந்து தலைமுறைகளுக்கு முந்தைய பழமையான கோயிலாகும். கோயிலை யார் கட்டியது என்பதற்கான சான்றுகள் இல்லை. இக்கோயிலின் உள்ளே மூலவராக கவுமாரியம்மன் கல்லால் ஆன விக்ரகம் உள்ளது. முருகன், விநாயகர், நவக்கிரகம், கருப்பசாமி என கல்லால் செதுக்கப்பட்ட விக்கிரகங்களும் உள்ளன. கடந்த 2023ல் திருப்பணி வேலை ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் துவங்கி உள்ளது. எம்.பி.யின் சொந்த கிராமம் என்பதால் அவரது தலைமையில் அனைத்து சமுதாயமும் கொண்ட 10 பேர் கமிட்டி அமைத்து பணிகள் துவங்கியது. தற்போது 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந் துள்ளன. கோயில் கோபுரம் கட்டுமான பணிகள் முடிந்து, ராஜகோபுர பணிகள் தற்போது நடந்து வருகிறது. மீதமுள்ள 20 சதவீத பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. கிராம கமிட்டி நிர்வாக குழு உறுப்பினர் செந்தில் கூறுகையில், இக் கோயில் திருப்பணி எம்.பி. தங்க தமிழ்செல்வன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. தனிப்பட்ட முறையில் இல்லாமல் அனைத்து சமுதாயமும் இணைந்து திருப்பணிகள் பணிகளை செய்து வருகிறோம். நன்கொடை வழங்க விருப்பமுள்ள பக்தர்கள் 86108 05041 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு, கிராம கமிட்டி வங்கி கணக்கிற்கு நன்கொடை வழங்கலாம். வங்கி கணக்கு எண் : நாராயணத்தேவன்பட்டி கனரா வங்கி 1101 2496 0970, ஐ.எப்.சி. கோடு எண் CNRB0004016. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி