உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நவராத்திரி விழா

தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நவராத்திரி விழா

பெரியகுளம்: பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் 46-ம் ஆண்டு நவராத்திரி இலக்கிய விழா திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து நாதஸ்வர வித்வான் சுப்புராமன் இசையுடன் விழா துவங்கியது. தலைவர் ரத்தினவேலு தலைமை வகித்தார். செயலாளர் சிதம்பர சூரியவேலு, துணைச் செயலாளர் வீரமணி, பொருளாளர் தாமோதரன், அமைப்பாளர் புலவர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தனர். சின்ன திரை பாடல் நிகழ்ச்சியில் முதலிடம் பெற்ற பெரியகுளம் மாணவி காயத்ரி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவி பரணி கவுரவிக்கப்பட்டனர். நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில், 'இன்றைய சூழ்நிலையில் நம் வாழ்க்கை யார் கையில்' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. 'நம் கையில்' என்ற அணியில் பேச்சாளர்கள் ராஜ்குமார், கவிதா ஜவகர், 'பிறர் கையில்' என்ற தலைப்பில் பேச்சாளர்கள் ரேவதி சுப்புலட்சுமி, ராஜா பேசினர். இன்றைய சூழ்நிலையில் நம் வாழ்க்கை பிறர் கையில் தான் உள்ளது என நடுவர் தீர்ப்பு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ