மேலும் செய்திகள்
நுாலகம் இடமாற்றம்
14-Apr-2025
சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே சீலையம்பட்டி சமத்துவபுரத்தில் வசிக்கும் சரவணன் 32, குடும்பம் நடத்த தனது மனைவி வராத ஆத்திரத்தில் பக்கத்து வீட்டு பெண் அரியக்காள் 55, என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். சீலையம்பட்டி சமத்துவபுரம் சின்னக்காளை மகன் சரவணன் 32, இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த குருவையா மகள் முருகேஸ்வரி 28,க்கும் இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சரவணன் மது குடித்து விட்டு தினமும் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் முருகேஸ்வரி தனது பெற்றோர் வீட்டில் ஓராண்டாக வாழ்ந்து வருகிறார் . சரவணன் குடித்து விட்டு, மாமனார் வீட்டிற்கு வந்து மனைவியை குடும்பம் நடத்த அழைப்பதும், அவர் மறுப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. தனது மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பதற்கு மாமியார் சரணமணி 54, பக்கத்து வீட்டில் வசிக்கும் பால்ச்சாமி மனைவி அரியக்காள் 55, தான் காரணம் என சரவணன் கருதினார். நேற்று முன்தினம் மாலை குடித்து விட்டு மாமனார் வீட்டில் தகராறு செய்தார். அங்கு வந்த அரியக்காளை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். தப்பி ஓட முயன்ற சரவணனை, மாமனார் குருவையா, சரணமணி, முருகேஸ்வரி ஆகியோர் பிடிக்க முயன்றனர். அப்போது சரணமணியையும் கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.காயமடைந்த இருவரையும் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் அரியக்காள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். அரியக்காளின் மகன் முனியப்பன் புகாரின் பேரில் சின்னமனூர் எஸ்.ஐ. அருண் வழக்கு பதிவு செய்து சரவணனை தேடி வருகிறார்.
14-Apr-2025