உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு கல்லுாரியில் புதிய வகுப்பறை திறப்பு விழா

அரசு கல்லுாரியில் புதிய வகுப்பறை திறப்பு விழா

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா நடந்தது.2002ம் ஆண்டு காமராஜ் பல்கலை உறுப்புக்கல்லூரியாக துவக்கப்பட்ட இக்கல்லூரி 2019ம் ஆண்டு முதல் அரசு கல்லூரியாக செயல்படுகிறது. கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் கல்வி மேம்பாட்டு திட்டத்தில் 2023 -20-24ம் ஆண்டில் ரூ.3.70 கோடி மதிப்பில் 12 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கதிரவன், உதவி செயற்பொறியாளர் தங்கரத்தினம், கல்லூரி முதல்வர் சுஜாதா, பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை