உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடிநீர் வடிகால் வாரியத்தில் மோசடி செய்த ரூ.1.18 கோடியில் புதிய வீடு கண்காணிப்பாளர் ஒப்புதல்

குடிநீர் வடிகால் வாரியத்தில் மோசடி செய்த ரூ.1.18 கோடியில் புதிய வீடு கண்காணிப்பாளர் ஒப்புதல்

தேனி:தேனியில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த முருகானந்தம் ரூ.1.18 கோடி அலுவலக பணத்தை மோசடி செய்து அதில் வீடு கட்டி வருவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா சிலுக்குவார்பட்டி முருகானந்தம் 56, குடிநீர் வடிகால் வாரிய கழிவுநீர் அகற்றும் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்தார். உயரதிகாரிகள் தணிக்கையில் ரூ.1.18 கோடி மோசடி செய்தது கண்டறியப்பட்டது. கண்காணிப்பு பொறியாளர் கருத்தபாண்டியன் புகாரில் முருகானந்தம் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். போலீஸ் காவலில் விசாரிக்க போலீசார் மனு அளித்தனர். நவ.,30 முதல் டிச., 2 வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது.போலீசார் கூறியதாவது: முருகானந்தம் 2019ல் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் தட்டச்சராக சேர்ந்தார். கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றவர். முன்னாள் கண்காணிப்பு பொறியாளர் லிடியால் நவமணிதேன்மொழி 2022ல் மே 13 முதல் 23 வரை நடத்திய ஆய்வில் மோசடி செய்தது தெரிந்தது. இதில் இவர் சென்னை கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு ரூ.40.85 லட்சத்தை அனுப்பியதாக மோசடி செய்தார். பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஒரே நாளில் பணத்தை திருப்பி செலுத்தினார். அதன்பின் தேனி பொறுப்பு கண்காணிப்பு பொறியாளராக நியமிக்கப்பட்ட மகேந்திரன் காசோலை' கையெழுத்திடும் அதிகாரம் முருகானந்தத்திற்கு வழங்கினார். அதனை பயன்படுத்தி நிதி ஆவணங்களில் முறைகேடு செய்து ரூ.1.18 கோடி மோசடி செய்து, சிலுக்குவார்பட்டியில் புதிய வீடு கட்டி வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளார் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை