மலர் பயிர்களில் புதிய ரகம்தொழில் நுட்பக் கருத்தரங்கம்
பெரியகுளம்; பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மலரியல், நில எழிலுாட்டும் துறையின் சார்பில், 'மலர் பயிர்களில் புதிய ரகங்கள்' என்ற தலைப்பில் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மலரியல் துறை தலைவர் ராஜாதுரை வரவேற்றார். வணிக மலர் பயிர்களில் புதிய ரகங்கள் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார்.பூச்சியியல் துறை தலைவர் சுகன்யா கண்ணா, பேராசிரியர்கள் சதீஷ், கல்பனா, லெனின்ராஜா, தேனி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் 70 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை முதுகலை மலரியல்துறை மாணவர்கள் செய்திருந்தனர்.-