மேலும் செய்திகள்
என்.எஸ்.எஸ்., திட்ட முகாம்
01-Oct-2024
தேனி : மாவட்டத்தில் 20 கிராமங்களில் பள்ளி என்.எஸ்.எஸ்.,மாணவர்கள் நடத்திய முகாம்கள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தன.மாவட்டத்தில் உள்ள 55 பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., திட்டம் செயல்படுகிறது. இத் திட்டம் மூலம் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் கிராமங்களில் தங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். காலாண்டு விடுமுறையில் 20 பள்ளிகளில் சார்பில் 20 கிராமங்களில் முகாம்கள் நடந்தன. இம் முகாம்களில் போதை ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு , மரக்கன்றுகள் நடவு, தீ தடுப்பு, உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டத்தில் செப்.,28 ல் துவங்கிய முகாம்கள் அக்.,4ல் நிறைவடைந்தது. அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, மேல சிந்தலைச்சேரியில் நடந்த நிறைவு விழாக்களில் சி.இ.ஓ., இந்திராணி பங்கேற்றார். அல்லிநகரத்தில் நடந்த விழாவில் ரூ.50ஆயிரம் மதிப்புள்ள சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. முகாம்களை மாவட்ட என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் நேருராஜன் ஒருங்கிணைத்தார்.
01-Oct-2024