மேலும் செய்திகள்
முன் விரோத தகராறில் ஓய்வு எஸ்.ஐ., ஓட்டல் சேதம்
01-Sep-2024
தேவதானப்பட்டி: ஆதிதிராவிடர் வீட்டுமனை திட்டத்தில் வீடுகட்ட சுவர் எழுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த இருவரிடம் ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி விஜயலட்சுமி 37. இவருக்கு தமிழக அரசு இலவச வீட்டுமனை திட்டத்தில் காலிமனை பட்டா வழங்கியது.இதில் தகர மேற்கூரை அமைத்து இருந்தனர். இந்நிலையில் விஜயலட்சுமி, தனது இடத்தில் சுவர் கட்டி, ஆர்.சி., வீடு கட்ட துவங்கினார். இந்நிலையில் இவர்களது இடத்தை நடைபாதையாக பயன்படுத்திய கவுசியாபானு 30. இவரது உறவினர் சையதுமஸ்தான் 30. விஜயலட்சுமி ஆகியோர் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து, கடப்பாரையால் வீட்டு சுவரை இடிக்க முயன்றனர்.இதை தடுக்க சென்ற விஜயலட்சுமியையும், அவர்களது குடும்பத்தை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். ஜெயமங்கலம் போலீசார் பவுசிகாபானு, சையதுமஸ்தானிடம் விசாரணை செய்து வருகின்றனர்.-
01-Sep-2024