டூவீலர்கள் மோதி ஒருவர் பலி
கூடலுார், : கூடலுார் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் 56. நேற்று காலை லோயர்கேம்ப் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் கூடலுார் நோக்கி டூவீலரில் வந்தபோது தம்மணம்பட்டி அருகே எதிரே கூடலுார் கருணாநிதி காலனியைச் சேர்ந்த அன்பில்ராஜன் 52, ஓட்டி வந்த டூ வீலருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முருகன் இறந்தார். காயமடைந்த அன்பில்ராஜனை கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கூடலுார் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.