உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒரு ரூபாய்க்கு ஒரு மாத இலவச அழைப்பு 

ஒரு ரூபாய்க்கு ஒரு மாத இலவச அழைப்பு 

தேனி:பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் ஒரு ரூபாய்க்கு ஒரு மாத இலவச அழைப்பு திட்டம் செப்., 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில் 5 ஜி தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. சுதந்திர தின சலுகையாக புதிதாக பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாயில் சிம்கார்டு வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி தினமும் 2 ஜி.பி., இண்டர்நெட், ஒரு மாதத்திற்கு இலவச அழைப்புகள் மேற்கொள்ளலாம். இந்த திட்டம் செப்.,15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற நெட்வொர்க்கில் இருந்து மாறும் வாடிக்கையாளர்களுக்கும் இச்சலுகை பொருந்தும். பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை