உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒரு கிலோ கஞ்சா ஒருவர் கைது

ஒரு கிலோ கஞ்சா ஒருவர் கைது

ஆண்டிபட்டி: கணேசபுரம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ராஜதானி எஸ்.ஐ., முகமது யஹ்யா மற்றும் போலீசார் கணேசபுரம் அருகே விருமானூத்து ஓடை ஆலமரத்தடியில் வாகன சோதனையில் இருந்தனர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி சென்றவரை விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். விசாரணையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் கம்பம் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த விவேக்குமார் 36, என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்துள்ளது. கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் விவேக்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ