உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போதையில் கிணற்றில் மூழ்கி ஒருவர் பலி

போதையில் கிணற்றில் மூழ்கி ஒருவர் பலி

போடி:போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி காலனி மூன்றாவது தெருவில் வசித்தவர் மணிகண்டன் 43. டிரைவர். இவர் தனது உறவினர்களுடன் மது போதையில் மேலச்சொக்கநாதபுரம் சங்கரப்பன் கண்மாய் அருகே உள்ள கிணற்றில் குளித்து உள்ளார். அப்போது மணிகண்டன் கிணற்று நீரில் மூழ்கினார். உடன் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. தீயணைப்புதுறையினர் கிணற்றில் மூழ்கி இறந்து கிடந்த மணிகண்டனின் உடலை மீட்டனர். மனைவி திவ்யா 32. புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை