உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தகராறில் ஒருவர் கைது

 தகராறில் ஒருவர் கைது

தேனி : கேரள மாநிலம் எர்ணாகுளம் இல்லிக்கல்லை சேர்ந்தவர் ஜேக்கப் 41. இவர் தனது சொந்த வேலையாக தேனி வந்தார். பின் கேரளா செல்வதற்காக நேற்று மதியம் 1:00 மணிக்கு தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் உள்ள மூணாறு பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தார். கேரளா மூணாறு ஆணைமுடி பெரியவாறை எஸ்டேட் டிவிஷனை சேர்ந்த சிவா 34, தனது அலைபேசியை எடுத்தது நீ தானடா என ஆபாசமாக பேசி, கைகளால் தாக்கி காயத்தை ஏற்படுத்தினார். பின் அருகில் கிடந்த கட்டையை எடுத்து காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட ஜேக்கப் புகாரில், தேனி எஸ்.ஐ., பாஸ்கரன், சிவா மீது வழக்குப்பதிந்து கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ