உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தேர்தல் நடத்தை விதிமுறை வாபஸ் கணக்கு தாக்கல் செய்ய உத்தரவு

 தேர்தல் நடத்தை விதிமுறை வாபஸ் கணக்கு தாக்கல் செய்ய உத்தரவு

மூணாறு: கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையர் ஷாஜகான் தெரிவித்தார். இம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் டிச.9, 11 ஆகிய நாட்களில் நடந்தது. அதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையர் ஷாஜகான் தெரிவித்தார். அதேசமயம் மலப்புரம் மாவட்டத்தில் மூத்தேட்டம், எர்ணாகுளம் மாவட்டத்தில் பாம்பக்குடா ஆகிய ஊராட்சிகளில் தலா ஒரு வார்டுகளிலும், திருவனந்தபுரம் மாநகராட்சியில் விழிஞ்சம் வார்டிலும் வேட்பாளர்கள் இறந்ததால், அந்த மூன்று வார்டுகளிலும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாகவும் ஆணையர் தெரிவித்தார். தாக்கல்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள் ஜன.12ம் தேதிக்கு முன்பாக செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆணையத்தின் 'வெப் சைட்' (www.sec.kerala.gov.in) வாயிலாக தாக்கல் செய்ய வேண்டும். அல்லாத பட்சத்தில் பில், ரசீது, வவுச்சர் ஆகியவற்றுடன் நேரில் தாக்கல் செய்யலாம். தவறினால் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும், உறுப்பினராக நீடிக்கவும் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி