உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏற்பாடு n இடைநின்ற 150 மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க n பொதுத்தேர்வு எழுத வைக்க பள்ளிக்கல்வித்துறை

ஏற்பாடு n இடைநின்ற 150 மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க n பொதுத்தேர்வு எழுத வைக்க பள்ளிக்கல்வித்துறை

மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 70, உயர்நிலைப்பள்ளிகள் 36 என மொத்தம் 530 அரசுப்பள்ளிகள் உள்ளன. இங்கு 10ம் வகுப்பில் 6 ஆயிரம் பேர், பிளஸ் 1 வகுப்பில் 5 ஆயிரம் பேர், பிளஸ்2 வில் 5,191 பேர் என அரசுப்பள்ளிகளில் மொத்தம் 60,795 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, 2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்விற்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் கடந்தாண்டு நடந்த பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆகியது பள்ளி, கல்வித்துறைக்கு அதிர்ச்சி அளித்தனர். அதனால் கல்வித்துறையினர் இம்முறை மாணவர்கள் பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆவதை தவிர்க்க பல்வேறு முயற்சிகள் இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்தே மேற்கொண்டுள்ளனர்.இந்தாண்டு உயர்நிலை, மேல்நிலை வகுப்புகள் படித்த சில மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்கான பள்ளி செல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதில் சில மாணவர்கள் காலாண்டு தேர்வு வரை பள்ளிக்கு வந்த நிலையில் திடீரென பள்ளி செல்லாமல் தொடர் ஆப்சென்ட் ஆகியது ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியளித்தது. பள்ளிக்கு வராத மாணவர்களை மேலாண்மை குழு மூலம் விசாரிக்கையில்,' பள்ளி செல்லாத மாணவர்கள் தங்களுக்கு படிக்க விருப்பம் இல்லை என்றும், ஒரு சிலர் குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு செல்வதாக கூறி வகுப்புகளுக்கு செல்லாமல் இருந்தனர். இம் மாணவர் பற்றிய விவரங்கள், பெற்றோர் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில் படிக்க விரும்பமில்லாத 150 மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து, பொதுத்தேர்வு எழுத வைப்பதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.கல்வித்துறை சார்பில் இம் மாணவர்கள், பெற்றோர்களை ஒருங்கிணைந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங்கில் உயர்கல்வி, தொழிற்கல்விகள், வேலை வாய்ப்பு, தொழில் துவங்குவது பற்றி ஆலோசனைகள் வழங்குவது, தன்னம்பிக்கை பேச்சாளர்கள் மூலம் சொற்பொழிவு மூலம் கல்வி கற்பதன் அவசியத்தை உணர்த்திடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை