உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி சைக்கிள் ஊர்வலத்திற்கு ஏற்பாடு

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி சைக்கிள் ஊர்வலத்திற்கு ஏற்பாடு

தேனி: பொது மக்களிடம் ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டிப்பட்டி கணவாய்முதல் லோயர்கேம்ப் வரை விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்க உள்ளது. ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாகவே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லுாரிகளில் கட்டுரை, கவிதை பேச்சுப்போட்டிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரங்கோலி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. விழிப்புணர்வு ஏற்படுத்த மினிமாரத்தான், சைக்கிள் ஊர்வலம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.அதிகாரி ஒருவர் கூறுகையில், விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் ஆண்டிப்பட்டி கணவாயில் துவங்கி க.விலக்கு, வைகை அணை, பெரியகுளம், தேனி நகர்பகுதி, போடி, கம்பம், கூடலுார் வழியாக லோயர்கேம்பில் முடிகிறது. இந்த ஊர்வலத்தில் பல்வேறு குழுக்கள் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொறு குழுவும் குறிப்பிட்ட பகுதியில் ஊர்வலத்தில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ