வீட்டின் கேட்டை பதிமூன்றாவது முறையாக திறந்து சென்ற படையப்பா
மூணாறு : தேவிகுளத்தில் நேற்று அதிகாலை பதிமூன்றாவது முறையாக வீட்டின் முன்புற கேட்டை திறந்து படையப்பா உள்ளே சென்றது.மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். அதன் செயல், நடமாட்டம் ஆகியவை தனித்துவம் வாய்ந்தது என்பதால் படையப்பா அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றது.மூணாறு அருகே தேவிகுளம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நடமாடிய படையப்பா நேற்று அதிகாலை 3:45 மணிக்கு ஜார்ஜ் வீட்டின் முன்புற கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று தீவனத்தை தேடியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜார்ஜ் வீட்டின் கேட்டை திறப்பது பதிமூன்றாவது முறையாகும். பதிமூன்று முறையும் உள்ளே நுழைந்த படையப்பா வேறு சேதங்கள் எதுவும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.