உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நெற்பயிரில் தண்டு துளைப்பான் பூச்சியை கட்டுப்படுத்த ஆலோசனை

நெற்பயிரில் தண்டு துளைப்பான் பூச்சியை கட்டுப்படுத்த ஆலோசனை

தேனி: ''நெற்பயிரில் மகசூலை பாதிக்கும் தண்டு துளைப்பான பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்.'' என, வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். வேளாண்துறையினர் கூறியதாவது: தண்டு துளைப்பான் பூச்சிகள் நெற்பயிரில் இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டையிடும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து, அதனை உட்கொள்ளும். இதனால் இலையின் நடுப்பகுதி காய்ந்து விடும். இதனை குருத்து காய்தல் எனக் கூறுவோம். பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் கதிர்களும் காய்ந்த நிலையில் காணப்படும். பழுப்பு நிற அந்துபூச்சிகள் வயலில் இருக்கும். தண்டு துளைப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா ஜப்பானிக்கம் எக்டேருக்கு 5 மி.லி., வீதம் இரு முறை நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். நாற்றுகளை நெருக்கமாக நடவு செய்யக் கூடாது. வேப்பங்கொட்டை சாறு தெளித்தல், நாற்று நடவின் போது நாற்று நுனியை கிள்ளி விடுதல் ஆகியவற்றின் மூலம் தண்டு துளைப்பான் புழுக்களை கட்டுப்படுத்தலாம்., என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை