உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வரைபடம் மூலம் தேவைகளை பட்டியலிடும் ஊராட்சி நிர்வாகம்

வரைபடம் மூலம் தேவைகளை பட்டியலிடும் ஊராட்சி நிர்வாகம்

ஆண்டிபட்டி: ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமத்தின் வரைபடம் வரைந்து பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் என்னென்ன என்பது குறித்த புள்ளி விபரங்களை ஊராட்சி நிர்வாகத்தினர் சேகரிக்கின்றனர். தமிழக அரசு வெற்றித்திட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு ஊராட்சியிலும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள், தேவைகள் என்னென்ன உள்ளன என்பது குறித்து விபரங்களை சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி ஒன்றியம், தெப்பம்பட்டி ஊராட்சியில் கிராமத்தின் வரைபடத்தை சமுதாய கூட வளாகத்தில் வரைந்தனர். பி. டி.ஓ., ராகவன், மண்டல துணை பி.டி.ஓ.,சித்ரா, ஓவர்சியர் சித்திக், ஊராட்சி செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களை வரவழைத்து தங்கள் பகுதியில் இருப்பிடத்தை சுட்டிக்காட்டி அப்பகுதிக்கு தேவையான திட்டங்கள் குறித்து விவரம் கேட்டு அவற்றை பதிவு செய்தனர். பதிவு செய்த புள்ளி விபரங்கள் நேரடி ஆய்வுக்குப் பின் மீண்டும் வரைபடமாக தயாரித்து அரசின் ஒப்புதலுக்காக அனுப்புகின்றனர். அடிப்படைத் தேவையின் முக்கியத்துவம், ஊராட்சியில் நிதி நிலைக்கேற்ப பட்டியலிடப்படும் திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினால் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை