அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் கலெக்டர் அறிவுறுத்தல்
தேனி: மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தவும், கல்வி நிலையங்கள் பகுதியில் சோதனைகளை தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் போதைப்பொருள் தடுப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில் வருவாய்,சுகாதாரம்,கல்வித்துறை, போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுத்தல், பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தவும். விடுமுறை தினங்களில் மாணவர்களின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிதல் வேண்டும். சுகாதாரத்துறை மூலம் பள்ளிகளில் மாணவர்கள் உடல்நிலை ஆர்.பி.எஸ்.கே., என்ற குழு மூலம் ஆண்டிற்கு ஒரு முறை பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த குழுவின் மூலமும் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிய அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.