உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு கட்சி பிரமுகர்கள் இடையூறு

ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு கட்சி பிரமுகர்கள் இடையூறு

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகரில் பெரும்பாலான தெருக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட தெருக்களில் செல்ல முடிவதில்லை. சிலர் வீட்டு படிக்கட்டுகள், தகரசெட்டு, சாய்தளங்கள் தெருவில் அமைத்துள்ளனர். இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பலர்நகராட்சியில் புகார் அளித்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை சர்வே செய்து அகற்ற நகராட்சி கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிதுவங்கும் முன்பே பல கட்சியினர், அமைப்பினர் குறிப்பிட்ட பகுதியில் பார்த்து ஆக்கிரமிப்பு பணி மேற்கொள்ளுங்கள்' என அதிகாரிகளிடம் சிபாரிக்கு வருகின்றனர். இதனால் நகராட்சி அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், கட்சி பேதமின்றி அனைத்து வார்டுகளிலும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஒருதலைபட்சமாக மேற்கொள்ள கூடாது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை