உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பஸ்களில் பழுதான டிஜிட்டல் போர்டுகளால் பயணிகள் குழப்பம்

அரசு பஸ்களில் பழுதான டிஜிட்டல் போர்டுகளால் பயணிகள் குழப்பம்

தேனி: மாவட்டத்தில் இயக்கப்படும் தொலை துார அரசு பஸ்களில் டிஜிட்டல் போர்டுகள் பழுதாகி காணப்படுகிறது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.மாவட்டத்தில் உள்ள 7 அரசு பஸ் டிப்போக்கள் மூலம் மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பல பஸ்களில் டிஜிட்டல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த டிஜிட்டல் பலகைகளை பராமரிப்பதில் பஸ் டெப்போக்கள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பல பஸ்களில போர்டுகள் செயல்பாடுகள் இன்றி முடங்கி உள்ளது. சில பஸ்களில் பாதி எழுத்துக்கள் மட்டும் தெரிகின்றன. இதனால் அவசர கதியில் பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் பஸ்கள் மாறி ஏறிச்செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.பயணிகள் சிரமத்தை தவிர்க்க டிஜிட்டல் போர்டுகளை பராமரித்து இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை