உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பஸ்சில் ‛கிளட்ச் அறுந்ததால் இறக்கி விடப்பட்ட   பயணிகள்

அரசு பஸ்சில் ‛கிளட்ச் அறுந்ததால் இறக்கி விடப்பட்ட   பயணிகள்

தேனி: தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்பூர் புறப்பட்ட அரசு பஸ் கிளட்ச் பிடிக்காததால் பஸ் ஸ்டாண்ட் அருகே பயணிகள் இறக்கி விடப்பட்டனர். தேனி புதுபஸ் ஸ்டாண்ட் 3வது பிளாட்பாரத்தில் இருந்து கோவை,திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று காலை 10:40 மணிக்கு தேனி டெப்போ அரசு பஸ் திருப்பூருக்கு புறப்பட்டது. பஸ்சில் 20 பயணிகள் இருந்தனர். பஸ் புறப்பட்டு பஸ் ஸ்டாண்ட் பூங்கா அருகே சென்ற போது ‛கிளட்ச்' பழுதானதால் பஸ்சை டிரைவர் ரோட்டோரத்தில் நிறுத்தினார். டிரைவர் இறங்கி பார்த்த போது ‛கிளட்ச்' கேபிள் அறுந்திருந்தது. பயணிகள் இறக்கி விடப்பட்டனர். டெப்போவில் இருந்து பணியாளர்கள் வந்து சீரமைத்து பஸ் எடுத்து செல்லப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் பழுது ஏற்பட்டதால் பயணிகள் வேறு பஸ்களில் உடனடியாக ஏறி சென்றனர். இடையில் நின்றிருந்தால் பயணிகளும் சிரமத்திற்குள்ளாகி இருப்பர். அரசு பஸ்களை முறையாக பராமரித்து இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ