உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வன விலங்குகளால் பயிர்கள் சேதம் குறைதீர் கூட்டத்தில் பெரியகுளம் விவசாயி மனு

வன விலங்குகளால் பயிர்கள் சேதம் குறைதீர் கூட்டத்தில் பெரியகுளம் விவசாயி மனு

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 319 மனுக்களை அளித்தனர்.கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 319 மனுக்களை அளித்தனர்.ஊஞ்சாம்பட்டி ஊராட்சி சுக்குவாடன்பட்டி இந்திரா காலனி பொன்னுத்தாய் தலைமையில் பொதுமக்கள் வழங்கிய மனுவில், இப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளில் போதிய இடவசதி இல்லை. இதனால் வீட்டில் நடைபெறும் விஷேசங்கள் ரோட்டில் நடத்தும் நிலை உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சமுதாய கூடம் அமைத்து தர கோரினர்.கோம்பை சந்திரன் தலைமையில் பொதுமக்கள் வழங்கிய மனுவில், இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க வேண்டும் என்றிருந்தது.பெரியகுளம் தாலுகா டி.கள்ளிபட்டி வெள்ளபாண்டி மனுவில், எனக்கு சொந்தமான தோட்டம் கைலாசநாதர் கோயில் செல்லும் வழியில் உள்ளது. இப்பகுதியில் உள்ள வயல்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் வனவிலங்குகள், மயில்களால் சேதமடைகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரினார்.கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் நலசங்கத்தினர், வைகை டிராக்டர், டிப்பர் உரிமையாளர்கள் நலசங்கத்தினர் சார்பில் நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவில், 'மாவட்டத்தில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஒரு ஆண்டில் மூன்று முறை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ரூ. 200 முதல் ரூ. 300 வரை மட்டும் விலை உயர்த்தினர். தற்போது முறையான அறிவிப்பின்றி ரூ. ஆயிரம் உயர்த்தி உள்ளனர். இதனால் கட்டுமான தொழில் பாதிக்கப்படுகிறது. விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் செப்.,19 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என குறிப்பிட்டு இருந்தனர்.குறைதீர் கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, சமூக பாதுகாப்பு திட்ட தனி சப் கலெக்டர் முரளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை