உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பெரியாறு வைகை பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம் போலீசாருடன் வாக்குவாதம்

 பெரியாறு வைகை பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம் போலீசாருடன் வாக்குவாதம்

தேனி: பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சுருளிபட்டியில் மணற்படுகையில் ஏற்பட்டுள்ள கரை உடைப்பை அரசு சீரமைத்து தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜகுமார் முன்னிலை வகித்தார். காமயகவுண்டன்பட்டி பஞ்சமர் தெருவில் வசிக்கும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் வழங்கிய மனுவில், 'அதே பகுதியில் உள்ள அரசு ஓடைபுறம்போக்கு நிலத்தை மயானமாக பயன்படுத்தி வருகிறோம். அந்த நிலைத்தை அணைப்பட்டியை சேர்ந்த சிலர் மயானத்தை சமன் செய்து நிலமாக மாற்றி உள்ளனர். இதனால் இருசமூக பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானத்தை மீட்டு தர வேண்டும் என்றிருந்தது. பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் கம்பம் சுருளிபட்டியில் மணற்படுகையில் ஏற்பட்டுள்ள கரை உடைப்பை அரசு சீரமைத்து தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர். மனு அளிக்க 5 நபர்கள் மட்டும் செல்லுமாறு தேனி இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான போலீசார் தெரிவித்தனர். ஆனால், அனைவரும் மனு அளிக்க செல்வோம், ஏன் தடுக்கிறீர்கள் என இன்ஸ்பெக்டரிடம் விவசாயிகள் சங்க தலைவர் மனோகரன், நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் சில விவசாயிகள் மட்டும் மனு அளிக்க சென்றனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பாலா தலைமையில் கட்சியினர் மாவட்டத்தில் சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடை செய்ய வேண்டும், கனிமவள கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை