உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டர் அலுவலகத்தில் மனு

கலெக்டர் அலுவலகத்தில் மனு

தேனி : கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ., வடக்கு மண்டல தலைவர் அழகர்ராஜா தலைமையில் கட்சியினர் மனு அளித்தனர். மனுவில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சுவாமி தரிசனம், ராட்டினத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் கட்டாய வசூலில் ஈடுபடுவபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. நிர்வாகிகள் மலைச்சாமி, ரவிக்குமார், பெரியசாமி, ஜெயமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை