உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்ணகி கோயிலுக்கு அர்ச்சகர்கள் நியமிக்க மனு

கண்ணகி கோயிலுக்கு அர்ச்சகர்கள் நியமிக்க மனு

தேனி: கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவில் அரசு சார்பில் 10 அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தனர்.பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சதீஸ்பாபு தலைமையில் விவசாயிகள் வழங்கிய மனுவில், 'கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவிற்கு அரசு சார்பில் 10 அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும். பக்தர்கள் காணிக்கையை அரசு ஏற்க வேண்டும். பளியன்குடி-தெள்ளுகொடி- கண்ணகி கோயில் பாதையை சீரமைக்க வேண்டும். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். கோயில் கருவறையில் 2அடி உயர கருங்கல் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும்,' என வலியுறுத்தினர். நிர்வாகி கொடியரசன், முல்லைசாரல் விவசாய சங்க நிர்வாகிள் ராஜா, ஜெயபால், சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை