உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கட்டட தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கட்டட தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தேனி,:தேனி அருகே கட்டட தொழிலாளி இளங்கோ 38, வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை வீரபாண்டி போலீசார் தேடி வருகின்றனர். தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டி லட்சுமிபுரம் சென்ட்ரிங் தொழிலாளி இளங்கோ. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கிராமத்தில் நேற்று முன்தினம் கிருஷ்ணன் கோயில் திருவிழா நடந்தது. திருவிழாவிற்கு சென்று வந்த இளங்கோ வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே பலத்த சத்தம் கேட்டது. வெளியே சென்று பார்த்த போது சுவரில் தீப்பற்றி எரிந்தது. கண்ணாடி பாட்டில்கள் உடைந்த நிலையில் இருந்தன. பிளாஸ்டிக் சேர் எரிந்த நிலையில் இருந்தது. வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரிந்தது. இதுதொடர்பாக இளங்கோ புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ