சிறுமி திருமணம் 4 பேர் மீது போக்சோ
பெரியகுளம்: சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், தாயார் கூலி வேலை செய்து வருகிறார். பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி சுப்புராஜ் தெருவைச் சேர்ந்த பொன்னையன் 25. இவரது தந்தை முத்தப்பன் 50. தாயார் முருகம்மாள் 44. சிறுமியின் தாயார் கலாவதி 38. ஆகியோர் உதவியுடன் 2025 ஆக.20ல் டி.கள்ளிப்பட்டி விநாயகர் கோயில் அருகே சிறுமியை, பொன்னையன் திருமணம் செய்தார். தற்போது சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். 18 வயது பூர்த்தியடையாத சிறுமி என தெரிந்தும் திருமணம் நடந்துள்ளது. மாவட்ட சமூக நலத்துறை தகவலில், பெரியகுளம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் வாசுகி பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார் பொன்னையன் உட்பட 4 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தார்.