மேலும் செய்திகள்
தி.மு.க., பெண் கவுன்சிலருக்கு அடி
19-Oct-2025
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் வீட்டில் இருந்துள்ளார். வடுகபட்டி மறவர் தெருவைச் சேர்ந்த சிறுமியின் அத்தை மகன் ராஜ்கவுதம் 19, சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் 2025 ஏப்.5ல் சிறுமியின் வீட்டிற்கு சென்ற ராஜ்கவுதம், சிறுமியுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதனை தொடர்ந்து ஜூன் 11ல் டி.கள்ளிப்பட்டி கோயிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது. 18 வயது பூர்த்தியடையாத சிறுமி திருமணம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் போதுமணி, பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இதனையடுத்து சிறுமியை திருமணம் செய்த ராஜ்கவுதம், இவரது தந்தை வடுகதுரை 42. தாய் வேல்மணி 43. உறவினர்கள் சித்திரன் 40. மீனாட்சி 36 ஆகிய 5 பேர் மீது, இன்ஸ்பெக்டர் ஜெயராணி போக்சோ வழக்கு பதிவு செய்தார்.
19-Oct-2025