உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பள்ளியில் பூ, வளையல் அணிய கட்டுப்பாடு புகாரில் போலீசார் விசாரணை

அரசு பள்ளியில் பூ, வளையல் அணிய கட்டுப்பாடு புகாரில் போலீசார் விசாரணை

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பூ, பொட்டு, வளையல் அணிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இது குறித்து பெற்றோர் பள்ளியில் விளக்கம் கேட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை ஜெயோசிலின். சில நாட்களாக மாணவிகள் வளையல், பொட்டு, பூவுடன் பள்ளிக்கு வருவதற்கு தலைமை ஆசிரியை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.இதுகுறித்து மாணவிகள் சிலர் பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர் சிலர் நேற்று மதியம் பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்டதால் பிரச்னை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி போலீசார் மாணவிகளிடம் விசாரித்தனர். மாணவிகளும் போலீசாரிடம் பள்ளியில் விதித்த கட்டுப்பாடு விபரங்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: மாணவிகள் சிலர் வழக்கத்திற்கு மாறான காதணிகள், கையில் காப்பு அணிந்து வருகின்றனர். மாணவிகள் நலனுக்காக பள்ளியில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை