உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தடை செய்யப்பட்ட புகையிலை 235 கிலோ, கார் பறிமுதல்; தப்பிச் சென்ற மூவருக்கு போலீசார் வலை

தடை செய்யப்பட்ட புகையிலை 235 கிலோ, கார் பறிமுதல்; தப்பிச் சென்ற மூவருக்கு போலீசார் வலை

கடமலைக்குண்டு : வருஷநாடு வனத்துறை சோதனைச் சாவடி அருகே காரில் தடை செய்யப்பட்ட 235 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் அடங்கிய மூடைகளை கடத்தி, மூவர் தப்பிச் சென்ற நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், புகையிலை மூடைகளை கைப்பற்றிய கடமலைக்குண்டு போலீசார், தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.கடமலைக்குண்டு எஸ்.ஐ., பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் கொம்புக்காரன்புலியூர் வனத்துறை சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த காரை மறித்தனர். போலீசாரை கண்டதும் காரில் இருந்த மூவரும் காரை விட்டு இறங்கி, தப்பி ஓடினர். காரில் தடை செய்யப்பட்ட 235 கிலோ எடையுள்ள பல்வேறு நிறுவனங்களின் புகையிலை பாக்கெட்டுகள் அடங்கிய மூடைகள் இருந்தன. இதன் மொத்த மதிப்பு ரூ.1.31 லட்சம் ஆகும். காரில் வந்தவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். வழக்கு பதிந்த கடமலைக்குண்டு போலீசார், கடத்தலில் ஈடுபட்டவர்கள் உள்ளூரில் யார், யாரிடம் தொடர்பு உள்ளது. எந்தெந்த கடைகளுக்கு விற்பனை செய்வதற்கு புகையிலைப் பாக்கெட்டுகளை கொண்டு சென்றனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி