உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..

டீ மாஸ்டர் தற்கொலைதேனி: பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடைத் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் 42. தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள டீ கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்தார். இவருக்கும் மதுராபுரியை சேர்ந்த கமலாவிற்கும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மகள் உள்ளார். மனைவி கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ள நிலையில் கமலா கணவனை விட்டு மகளுடன் தனியாக வசிக்கிறார். இதனால் பாண்டியராஜ் மன விரக்தியில் மது போதைக்கு ஆளாகி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். தனது தாயாருடன் வசித்தார். தயார் வெளியே சென்றபோது பேனில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தேனி போலீஸ் எஸ்.ஐ., ஜீவானந்தம் விசாரிக்கிறார்.பெண் நெஞ்சுவலியால் உயிரிழப்புதேனி: கம்பம் சுருளிபட்டி நடு ரைஸ் மில் தெரு நீலாவதி 52. ஏழு ஆண்டுகளாக கம்பம் தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக பணியாற்றினார். வழக்கம்போல் பள்ளியில் பணிகளை முடித்துவிட்டு சக பணியாளர்கள் ரூபா, ராஜியுடன் நடந்து வீட்டிற்கு சென்றனர். அப்போது பள்ளி முன் படப்படப்பாக வருவதாக கூறி மயங்கியவரை பள்ளி நிர்வாகம் காரில் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அன்றிரவு இறந்தார். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை